வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு ஆண்கள் காயமடைந்தனர்.
நேற்று சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரம் 21.15 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 40 வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். ஆனால் அவசர சேவைகளின் முயற்சிகளுக்குப் பின்னர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த இருவர் 30 வயது மதிக்கத்தக்கது. ஒருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மற்றவரின் நிலை உயிருக்கு ஆபத்தில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் வசிக்கும் பொதுமகன் ஒருவர் 5 தடவை துப்பாக்கிச் சூடு செவிமடுக்கப்பட்டதாகக் கூறினார்.
தாக்குதலாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. கொலைக்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.