கொக்கெய்ன் , குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது ! on Sunday, December 15, 2024
கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலிங்வூட் மாவத்தை பகுதியில் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (13) முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது 36 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், 203 கிராம் குஷ் போதைப்பொருள், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,875,000 ரூபா பணம், 05 கையடக்கத் தொலைபேசிகள், பணத்தை எண்ணும் இயந்திரம், 02 வங்கி அட்டைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வழங்கிய தகவலின்படி, கொலிங்வூட் மாவத்தை பகுதியில் வைத்து 600 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளுடன் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடைய மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மூவரும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.