கட்டுப்பாட்டு விலையை மீறிய 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் !

by smngrx01

on Sunday, December 15, 2024

By Shana

No comments

அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பான சோதனை நடவடிக்கைகளால் இதுவரை 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் சட்டத்தின் கீழ் சிக்கியுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் பிடிபட்டதாக அந்த அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்