7
போர்க்குற்ற சாட்சியமான வைத்தியர் ஆ. திருநாவுக்கரசு அவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை(14) மன்னார்ப் படுகொலை நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வைத்தியர் ஆ.திருநாவுக்கரசு மன்னார், முருங்கன் வந்திருந்தார்.
1980களில் 07 ஆண்டுகளாகப் பணி புரிந்த முருங்கன் வைத்தியசாலையைத் தரிசித்தார்.
அவருக்காகக் குறுகிய நேரத்தில் சிறிய வரவேற்பு நிகழ்வு அந்த வைத்தியசாலையினுடைய பொறுப்பதிகாரி வைத்தியர் ஒஸ்மன் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பணி செய்த இடத்தைப் பார்வையிட்டு ஒவ்வொரு விடுதியாகச் சென்று, இன்றைய வளர்ச்சிகளைக் கண்டு பார்த்து மகிழ்ந்திருந்தார்.