புதிய சபாநாயகர் யார்?

by adminDev

புதிய சபாநாயகர் யார்? on Saturday, December 14, 2024

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று (13) பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி, அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த இராஜினாமா குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ளதுடன், அரசியலமைப்பின் பிரகாரம் அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்