தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் 5 சிறிய கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் 204 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 85 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்படி, தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து 180 நாட்களுக்குள், அதிபரை பதவிநீக்கம் செய்வதா? அல்லது அவருக்கான அதிகாரத்தை திரும்ப வழங்குவதா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். ஒருவேளை அதிபர் பதவிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.