9
சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீட்பு ! on Saturday, December 14, 2024
தங்காலை – வீரகெட்டிய வீதிக்கு அருகில் உள்ள காணியில் நேற்று இரவு வெள்ளை நிற கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீரகெட்டிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் நுவான் விஜேதுங்கவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உரிமையாளர் இல்லாத இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார், கடவத்தை, விஜயபா மாவத்தை, மேல் கரகஹமுன, என்ற இடத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You may like these posts