சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது !

by wp_fhdn

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது ! on Saturday, December 14, 2024

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று 13.12.2024 சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 27 லீற்றர் கசிப்பும் 120 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்