தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி இடைநிறுத்தம் !

by 9vbzz1

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி இடைநிறுத்தம் ! on Saturday, December 14, 2024

சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன.

இருப்பினும், ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக நேரடியாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை முறைமையை அதே வழியில் செயல்படுத்த தீர்மானித்துள்ளன.

அதன்படி, தேசிய ஒலிம்பிக் குழுவின் விசேட பொதுச் சபைக் கூட்டம் நேற்று (13) இடம்பெற்றது. அங்கு தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை விரைவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், குழுவின் தற்போதைய பதவிக்காலம் ஏப்ரல் 2026 வரை காணப்படுகிறது.

நேற்று நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பரிந்துரைகளை பெற்று தேசிய ஒலிம்பிக் குழுவின், தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை வழங்கிய நிதி கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்