குகேஷ்: சீனாவின் டிங் லிரேனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றதன் பின்னணி

காணொளிக் குறிப்பு, உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த குகேஷ்

குகேஷ்: சீனாவின் டிங் லிரேனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றதன் பின்னணி

தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தொம்மராஜு உலக செஸ் சாம்பியனாகி இருக்கிறார்.

சிங்கப்பூரில் நடந்த கிளாசிக்கல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான டிங் லிரேனை வீழ்த்தி இந்த சிறப்பை அவர் பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.

இளம் வயதில் dஒஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்கு உரியவராக குகேஷ் மாறியுள்ளார்.

செஸ் ஜாம்பவானான ரஷ்யாவின் கேரி கேஸ்பரோவ் கடந்த 1985இல் தனது 22வது வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது அதனை 18 வயதான குகேஷ் முறியடித்திருக்கிறார்.

மேலும், இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியரும் அவர் தான். இதற்கு முன்பாக விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார்.

கடந்த 2013இல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி நார்வெயின் செஸ் வீரர் மேக்ஸன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்

பட மூலாதாரம், FIDE

தனது தற்போதைய வெற்றிக்கு பின் இந்த நிகழ்வையும் குகேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

‘2013இல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி நார்வேயன் செஸ் வீரர் மேக்னஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றபோதே, அந்த பட்டத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினேன்,தற்போது அது நிறைவேறி உள்ளது’ என்றார்.

சென்னையைச் சேர்ந்த குகேஷ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செஸ் விளையாடி வருகிறார். பொழுதுபோக்காக செஸ் விளையாடத் தொடங்கிய குகேஷிடம் உள்ள ஆர்வத்தை அறிந்துகொண்ட அவரின் பயிற்சியாளர் குகேஷை சிறப்பு பயிற்சிகளுக்கு அனுப்ப அவரது பெற்றோரிடம் வலியுறுத்தினார்.

கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது செஸ்ஸில் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் உள்ள கனவு. குகேஷுக்கு இந்த கனவு 2019-ல் நிறைவேறியது. பள்ளி பருவத்திலேயே கிராண்ட் மாஸ்டர் ஆன குகேஷ், இந்த பட்டத்தை வென்ற இளம் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

கடந்த 2018இல் ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்படோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன்பட்டம் வென்றார்.அதற்கு முன்பாக, 2016இல் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

தற்போது உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் குகேஷுக்கு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர். தமிழ்நாடு முதலமைச்சர், முன்னாள் செஸ் சாம்பியன்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்