உலக சதுரங்க சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக சதுரங்க சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
14ஆவது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58ஆவது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் இராண்டவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
இந்நிலையில், உலக சதுரங்க சாம்பியன் குகேஷ்க்கு ரூ. 5 கோடி பரிசுத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
18 வயதுடைய குகேஷ் சென்னையைச் சேர்ந்தவர். வரலாற்றில் இளம் உலக சாம்பியன் ஆனார் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
செஸ் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது இளையவரும் இவரே. இதற்கு முன்னர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் பட்டத்தை வென்ற முதல் இளையவர் ஆவார். அவர் 1985 இல் தனது 22 வயதில் சாதனை படைத்தார்.
இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துடன் இணைந்து பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய நாட்டவர் குகேஷ் ஆவார்.
கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்று ஏப்ரல் மாதம் டிங்கிற்கு எதிரான போட்டிக்கு தகுதி பெற்றார்.
டிங் 2023 இல் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை தோற்கடித்து பட்டத்தை வென்றார்.
நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஊக்கமின்மை காரணமாக 2022 இல் பட்டத்தை கைவிட்டார்.