on Friday, December 13, 2024
நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.