யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எனினும் எலிக்காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். அதற்கான தடுப்பு மருந்தும் உள்ளது என பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
டிசெம்பர் 1 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 12ம் திகதி இரவு 11 மணி வரை எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ,பெறுகின்ற நோயாளர்கள் எண்ணிக்கை 58 ஆகும். இதுவரை இறந்தவர்கள் 7 பேரில் பலர் எலிக்காய்ச்சலால் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இறந்தவர் ஒருவர்.
முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்டவர் நாவற்குழியில் தற்காலிகமாக வசித்த போது நேரடியாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர் ஒருவர்.
அதேவேளை வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வெளி நோயாளர் பிரிவில் வெளிநோயாளர்களுக்கும் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வியாழக்கிழமை (12) வழங்கப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் பரவலின் தீவிரத்தை குறைக்க முன்னெச்சரிக்கை முன்ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு விட்டன.தற்காலிக விடுதி திறக்கப்பட்டுள்ளது . தேவையான மருந்துகள் இருக்கின்றன.
மேலதிக மருந்துகள் மேலதிகமாக தேவைப்படும் மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் சுகாதார ஊழியர்களுக்கான கடமை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.எனவே மக்கள் பயம் கொள்ள தேவையில்லை எந்நேரமும் மருத்துவமனையை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது