இலங்கையில் சபாநாயகர் பதிவி விலகினார்!

by wamdiness

இலங்கையின் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல்ல அறிவித்துள்ளார். தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே  அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் பொய்யான கூற்றுக்கள் எதனையும் முன்வைக்கவில்லையென்றாலும், சில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவேடுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என தெளிவுபடுத்தினார்.

நான் முனைவர் பட்டம் பெற்ற ஜப்பானின் Waseda பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் பதவி விலகுவதாக தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்