அலிசன் ஃபெலிக்ஸ்: ‘தடகள வீராங்கனைகளின் மகப்பேறு உரிமைகளுக்காக போராட நான் பயந்தேன்’

காணொளிக் குறிப்பு, ஃபெலிக்ஸ் எடுத்த முயற்சியால், நைகி நிறுவனம் தனது கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்தது

அலிசன் ஃபெலிக்ஸ்: ‘தடகள வீராங்கனைகளின் மகப்பேறு உரிமைகளுக்காக போராட நான் பயந்தேன்’

ஓய்வு பெற்ற அமெரிக்க தடகள வீராங்கனையான ஆலிசன் ஃபெலிக்ஸ், மே 2019, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் கட்டுரையில், “தனது ஸ்பான்சர் நைகி (Nike), தான் தாயான பிறகு ஸ்பான்சர் தொகையில் 70% குறைக்க முயன்றது” என தெரிவித்தார்.

“நான் ஒரு தாயாக விரும்பினேன், எல்லா பெண்களையும் போல. ஆனால் அப்போது மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலையில் இருந்தேன். காரணம் என்னுடைய ஸ்பான்சர் உடனான நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் செல்லவில்லை. இதனால் எனக்கு ஒருவித அழுத்தம் இருந்தது.” என்கிறார் ஃபெலிக்ஸ்.

முதலில் இதுகுறித்து பொதுவெளியில் பேச தான் பயந்ததாகவும், ஆனால் அடுத்த தலைமுறை வீராங்கனைகள் இதை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக அனைவரின் கவனத்திற்கும் இதைக் கொண்டு வந்ததாகவும் ஃபெலிக்ஸ் கூறுகிறார்.

ஃபெலிக்ஸ் எடுத்த முயற்சியால், நைகி (Nike) நிறுவனம் தடகள வீராங்கனைகளின் ஸ்பான்சர் ஒப்பந்தங்கள் மற்றும் மகப்பேறு கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு