யாழில். கஞ்சாவுடன் கைதானவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில்

by wp_shnn

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச்சத்திரன் அனுமதித்துள்ளார். 

யாழ்ப்பாணம் – காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று கரையொதுங்கியுள்ளது. 

படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் அதனை புலனாய்வாளர்கள் சோதனையிட்ட போது , 92 பொதிகளில் 213. 899 கிலோ கிராம் கேரளா கஞ்சா படகினுள் காணப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து , படகில் வந்த இருவரையும் கைது செய்து , படகில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் , கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் பொலிஸார் முற்படுத்தினர். 

அதன் போது, சந்தேகநபர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் , அவர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும் என பொலிஸார் விண்ணப்பம் செய்தனர் 

பொலிசரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட பதில் நீதவான் இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்