பனிப்புயல் எச்சரிக்கை! கனடாவின் மத்தியமேற்கு ஒன்டாரியோவின் பெரும் பகுதிகள் மூடப்பட்டது!

by adminDev2

கனடாவின் வானிலை காரணமாக மத்திய மேற்கு ஒன்டாரியோவின் பெரும்பகுதி முழுவதும் பனிப்புயல் வீசுவதால் அப்பகுதி மக்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

பனிப்புயல் காரணமாக புரூஸ், கிரே, ஹுரோன் மற்றும் பெர்த் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பல சாலைகள் மூடப்பட்டன. நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்பொழிவு காரணமாக கின்கார்டின் அருகே சாலைகளில் இருந்து பனிகள் வாகனம் மூலம் இழுக்கப்பட்டன.

வெளியில் எதையும் பார்க்கமுடியாத நிலை காணப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை வரை 60 சென்டிமீற்றர் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்