இலங்கையில் குரங்குகளுக்கு கருத்தடை: இன்று முதல் திட்டம் ஆரம்பம்!

by wp_shnn

அதிகரித்து வரும் குரங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் குரங்குகளுக்குக் கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளை மேல் ஹரஸ்கம பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்டது. 

இத்திட்டத்திற்கு அரசாங்கம் ரூபா 4.5 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தில் பொறிகள் மற்றும் கூண்டுகளில் பிடிக்கப்படும் குரங்குகளை மீண்டும் அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் கருத்தடைக்காக கிரிதலே விலங்குகள் நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்