போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி விற்பனை; முன்னாள் உப பொலிஸ் கான்ஸ்டபிள் கைது ! on Wednesday, December 11, 2024
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி ஒன்றை 60 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் முன்னாள் உப பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய முன்னாள் உப பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
சந்தேக நபர் கொழும்பு 02 – கொம்பனி வீதியில் உள்ள காணியொன்று தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, அந்த காணியை 60 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.