18
யாழ் . போதனா வைத்தியசாலையில் கடத்த சில நாட்களில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
திடீர் காய்ச்சல் காரணமாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தால், எலிக்காய்ச்சல் பரவ கூடிய சாத்தியங்கள் உள்ள எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். காய்ச்சல் , சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.