ஊடகப்படுகொலை:கோவைகளை காணோம்!

by adminDev2

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் பலவும் காணாமல் போயுள்ளதாக ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறாது எனவும் அமைச்சர் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

“தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நாம் கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம்.

ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்விடயத்தில் அரசாங்கம் நிபந்தனைகள் இன்றி செயற்படும்.

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடக்கம் படுகொலை செய்யப்பட்ட சகல ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகள் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டிருந்தன. அதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் சேவையிலிருந்து இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்திய நிலை காணப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்டவர்கள் கூட நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

தேடிப் பார்த்தபோது காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் போன்றவற்றின் அறிக்கைகளின் பிரகாரம் குற்றங்களுடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்