அஹுங்கல்ல கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் ! on Wednesday, December 11, 2024
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு தம்பதிகளை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர்.
விபத்தில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண் 30 வயதான சீன பிரஜை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 29896 லசன்ன, பொலிஸ் கான்ஸ்டபிள் 19342 சங்கீத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 103992 துலஞ்சய ஆகியோர் இந்த உயர் காப்பு பணிகளை மேற்கொண்டவர்கள் ஆவர்.