மனித உரிமைகளும், பொறுப்புக்களும்
வளர்ந்து வருகின்ற இன்றைய தொழிநுட்ப உலகில் காலத்திற்கு காலம், நிமிடத்துக்கு நிமிடம், செக்கனுக்கு செக்கன் மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதுடன், சமூக, அரசியல், கலாசார பொருளாதார விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ரீதியாக துரித கதியில் மனித வாழ்க்கையின் இருப்பினைஉறுதிசெய்து கொள்ளும் வகையில் இன்றைய சிந்தனையில் மனித உரிமைகளும் அதனுடன் இணைந்த மனித பொறுப்புக்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வகையில் அமைவதுடன் காலத்தின் தேவைக்கேற்ப முக்கியத்துவமும், முன்னேற்றகரமான மனித வாழ்வின் தன்மானம், உயிர்வாழ்தல் அடிப்படையில் மனித வாழ்க்கையில் உரிமைகளின் தாற்பரியமும் உணரப்பட்டு வருகின்றது.
ஒரு நாணயத்தின் இருபக்கம் போல் மனித உரிமைகளும், மனித பொறுப்புக்களும் ஒன்றுடனொன்று நெருக்கமான தொடர்பினை கொண்டிருக்கின்றது. இயற்கையாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு கடமைப்பட்டுூள்ளதுடன் மனிதனின் இருப்பிற்கு அவசியமான உரிமைகள் மனித உரிமைகள் எனப்படுகின்றது. மனித உரிமைகள் உலகலாவிய ரீதியில் பல்வேறு வகையான உரிமைகள் இனங்காணப்பட்டூள்ளது. பொதுவாக உரிமைகள் என்பது சமூகத்தாலும், அரசினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் மனித கோரிக்கைகள் ஆகும்.
உலகில் இடம்பெற்ற மாபெரும் யுத்தங்களான 1ம் உலகமகாயுத்தம்(1914-1918) உலக மக்களை கதிகலங்கச் செய்ததுடன், அதன் பின்னரான வர்சேல்ஸ் உடன்படிக்கையின் வாயிலான தோற்றம் பெற்ற சர்வதேச சங்கத்தின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து இடம்பெற்ற 2ம் உலகமகாயுத்தம் (1939-1945) காரணமாக ஏற்பட்ட இழப்பினைத் தொடர்ந்து உலகில் 3ம் உலகப்போருக்கான சூழ்நிலைகள் தோன்றுவதைத் தடுக்கும் வகையிலும், உலக சமாதானத்தினை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டூ ஐப்பசி 24ம் திகதி தோற்றம் பெற்றது. அதன் பின்னராக மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் 1948 டிசம்பர் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மனித உரிமைகள் பற்றி பிரகடனத்தை வெளியிட்டது.
அந்தவகையில் 2024ம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் “ Our rights, our future, rights now” என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையானது உலக நாடூகளில் உள்ள மக்களின் சமாதானம், தேசிய நல்லுறவு, தேசிய ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் எமது உரிமைகள், எமது எதிர்காலம், இப்போது உரிமைகள் என விமர்சனரீதியாக எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளத்தை பொதுமக்கள் வேண்டி நிற்கின்றனர். சுதந்திரமாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உரிமைகளை அனுபவித்து வாழ்வது அவனது கடமையாகும். அக்கடமைக்கான அச்சுறுத்தல்களை அகற்றி தேசிய நல்லுறவை வலுப்படுத்துவதே சுதந்திர அரசியல் யாப்புக்களைக் கொண்ட ஒவ்வொரு ஒவ்வொரு நாட்டினதும் பொறுப்புக்களாகும்.
மனித உரிமைகள் சில நாடுகளில் வரையறுப்பப்பட்டு அரசியல் யாப்புக்களில் பொறிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளாக பாதுகாக்கப்பட்டு உலக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் சில அமைப்புக்களாலும், நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநாளில் எவ்வித வேறுபாடூமில்லாத வகையில் எல்லாப் பாடசாலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் மனித உரிமை தொடர்பான பதாதைகளை காட்சிக்கு ந் ம், கொள் பரப்பவும், எல்லா சுதந்திர மனிதர்களை சிந்திக்கத் தூண்டி உயிர்வாழும் நிலையை பலப்படூத்தும் வகையில் உரிமைகளைப் பெறத் தூண்டவும் அங்கத்துவ நாடுகள் செயற்படுகின்றன.
சிறுவர் முதல் பெரியோர் வரை ஒவ்வொருவரும் மனித உரிமைப் பிரகடனத்திலுள்ள 30 உறுப்புரைகளில் முக்கியமானவற்றை அறிந்திருக்க வேண்டும். அந்தவகையில் உறுப்புரை1: சுதந்திரமாகப் பிறந்த
அனைவரும் சமனானவர்கள், உறுப்புரை2 இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் போன்ற வேறுபாடு கிடையாது, உறுப்புரை3- உயிர்வாழும் உரிமை, உறுப்புரை4 -அடிமை நிலையில் இருந்து விடுபடும் உரிமை, உறுப்புரை5: சித்திரவதையிலிருந்து விடுபடும் உரிமை, உறுப்புரை6*எல்லோரும் சட்டத்தின் முன் சமனானவர்கள், உறுப்புரை7 அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிரான தேசிய நியாயம் பெறும் உரிமை,
உறுப்புரை8 -குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்திற்கிணங்க சுற்றவாளியாக கருதப்பட வேண்டூம், உறுப்புரை9 -ஒவ்வொரு நாட்டின் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணம்
செய்வதற்கும் வசிப்பதற்கும் உரிமையுண்டு, உறுப்புரை10 -ஒரு தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டூ எனவும் குறிப்பிடப்பட்டூள்ளது.
மேலும், உறும்புரை11 -திருமணம் செய்வதற்கான உரிமை, உறுப்புரை12 -சொத்துரிமை, உறுப்புரை13 சிந்தனைச் சுதந்திரம், மனசாட்சிச் ந்திரம், மத ந்திரம் என்பவற் வெளிப்படுத்தும் உரிமை, உறுப்புரை14-பேச்சுச் சுதந்திரம், உறுப்புரை15. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை,
உறுப்புரை16 பிரதிநிதிகள் மூலமாகவும் பங்கு பெறும் உரிமை, உறுப்புரை17 சமூகப் பாதுகாப்பு உரிமை, உறுப்புரை18- தொழிலுக்கேற்ற சம்பளம் பெறும் உரிமை, உறுப்புரை19இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும்,
சமகால விடூமுறைக்குமான உரிமை, உறுப்புரை20 -சமூகத் தேவைகளுக்கும் குடும்ப நல்வாழ்வு, வாழ்க்கைத்தரத்திற்கான உரிமை, உறுப்புரை26 -கல்வி கற்பதற்கான உரிமை, உறுப்புரை21 கலைகளைக் கற்றல், அறிவியல் முன்னேற்றம் பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் OHCHR அறிக்கை-2024 இல், சில பிற்போக்கான அரசாங்கக் கொள்கைகள், போதிய சமூகப் பாதுகாப்பின்மை காரணமாக நாட்டின் பொருளாதார நெருக்கடியானது இலங்கையர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. ஏவ்வாறாயினும், அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நிலைமை மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இலங்கை மக்கள்தொகையில் 17%க்கும் அதிகமானோர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள்,
மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31% பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டூள்ளது. 1983-2009 உள்நாட்டூப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில், கடந்தகால மனித உரிமை
மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடூம்பங்கள், பொறுப்புக்கூறலுக்காக பிரச்சாரம் செய்த ஆர்வலர்கள் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர்.
ஒவ்வொரு மனிதர்களது வாழ்வை பூரணப்படுத்தும் வகிபங்கினை ஆற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் பல இலங்கையில் காணப்படுகின்றன. அந்த வகையில் சர்வதேச அளவிலான ஏற்பாடுகளாக ஜக்கிய நாடூகள் சபையுடன் இணைந்த வகையில் சமவாயங்கள், பிரகடனங்கள், உடன்படிக்கை என்பனவும் சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புரைகளின் கீழான ஏற்பாடுகள், நல்லாட்சியை முன்னெடுக்கும்Trans Federancy International Government, Asian Develop Bank என்பன அமைகின்றது. தேசிய ரீதியில் நாடூகளுக்கிடையில் அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடூுகளாக அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பு யாப்பில் பொறித்தல், மனித உரிமைகள் ஆணைக்குழு, குறைகேள் அதிகாரி, பொலிஸ், ஜக்கிய நாடூகள் சபையின் துணை தாபனங்கள், அரசியற்கட்சிகள், அமுக்கக்குழுக்கள், வெகுஜன ஊடகங்கள், சிவில் அமைப்புக்கள், பகிரங்க ஆணைக்குழுக்கள் என்பன காணப்படுகின்றன.
எனினும், சமூகப்பல்லினத்தன்மை கொண்ட நாடூகளில் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட நிலையில் எதிர்மறையான பிரதிபலிப்பினைக் காண முடிகிறது. கடந்த கால விளைவுகளின்
படி அரசாங்கத்தின் நிர்வாகச் சிக்கல்கள், இன, மத, சாதி ரீதியாக பிளவுபட்ட அரசியற்கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் அரசியல்வாதிகளின் பிற்போக்கான செயற்பாடுகள், உப சட்டங்கள், யாப்புத்திருத்தங்கள் என்பன மனித உரிமைகளையும், அதனுடன் இணைந்த மனித பொறுப்புக்களையும்
நமைறைப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதனை விட பயங்கரவாததச்சட்டம், அவசரகாலச்சட்டம்(1979) பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தடையாக உள்ளன. நாட்டில்
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளான காலநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு, உலகை கதிகலங்கச் செய்த சுனாமிப் பேரலை, கொவிட்-19, பாரிய நோய்கள், யுத்தங்கள் காரணமாக பல இலட்சம் உயிர்கள் பறிபோயின. உறவுகளை இழந்து துன்பங்களை மட்டூமே அனுபவித்துக் கொண்டிருக்கிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.
இனிவரும் காலங்களில் புதிய மாற்றங்களை தொழிநுட்ப வளர்ச்சியின் விந்தைக்கு அடிமையாகும் சமுதாயத்தை தடுப்பது மட்டுமின்றி பாலர் முதல் பல்கைலைக்கழங்கள் வரையில் மனித உரிமைகள்
தொடர்பிலான விழிப்புணர்வு வலுப்பெற வேண்டியது காலத்தின் தேவையாகும். எனவே, இவ்வுலகில் பிறந்த அனைவரும் சமனானவர்கள். இயற்கையாக பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் இயல்பான
வாழ்க்கையை கொண்டூ நடாத்துவதற்கும், இனம், மதம், அந்தஸ்து முதலான வேறுபாடுகளை களைந்து சமூகத்தில் தனக்கென நிலையானதொரு இடத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், அடிப்படை
உரிமைகளும், உரிமைகளை நியாயப்படுத்திக் கொள்ளும் வகையில் தனிமனிதர்களினதும், அரசாங்கத்தினதும் மனித பொறுப்புக்களும், மனித வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தினை, மாறும் கால நியதியுடனான சர்வதேச மனித அரங்கில் வலுப்பெற வேண்டியது காலத்தின் நியதியாகும் என்பதில் எத்தகைய ஐயமுமில்லை.
கந்தசாமி அபிலாஷ்
B.Ed.Hons(EUSL), M.Ed(EUSL), HND in English, NC in English