கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செவ்வியல் ஆடல் விழா சுட்டிக் காட்டுவது on Wednesday, December 11, 2024
உயர்ந்தது – தாழ்ந்தது, செம்மையானது – செம்மையற்றது, போன்ற பாகுபடுத்தல் மீண்டும் பரவலாக்கம் பெற எத்தணிக்கும் பின்புலம் யாது?
கொழும்பு தழிழ்ச்சங்கத்தின் “செவ்வியல் ஆடல் விழா” நடைபெறவுள்ள நிலையில் இதன் கட்டமைப்பு மற்றும் நிகழ்வின் நோக்கம் புலப்படுத்துவது
செவ்வியல் என்பது ஒரு அதிகாரத்தின் கட்டமைப்பு, சமஸ்கிரத சித்தாந்தம் அதிகாரத்தில் குறைந்த அல்லது தமக்கு கீழானவை எனக் கருதும் மக்களுக்கு எதிராக தங்களை உயர்ந்த தன்மையானதாக காட்ட முயலும் ஓர் சொல்லாடல். இவற்றை உயர்வானது செவ்வியல் எனவும், தமக்கு கீழானவற்றை பாமரம் எனவும் வகைப்படுத்த முயல்கின்றது.
மேற்கு ஐரோப்பிய காலனிய மயமாக்கம் நவீனம் (ஆழனநசn), பாரம்பரியம் (வுசயனவைழைn), எனக் கொண்டு, உள்;ர் மரபுசார் கலை பண்பாடுகளை ஏற்றத் தாழ்வாய் வகைப்படுத்தி அறிவு பூர்வமற்றது, காட்டுமிராண்டித்தனமானது என்ற புரிதலை உருவாக்கி வருகின்றது.
இக்கருத்தாடல் சார்ந்து இவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தி ஏற்றத் தாழ்வு மறுப்பாக்கத்திற்கெதிராக பல எழுத்துக்களும், கோட்பாடுகளும், புரட்சிகளும், செயல் வாதங்களும் இலங்கை மட்டுமல்லாமல் உலக பரப்பில் எதிர்ப்பு குரலாய் ஓங்கிய ஜனநாயகத் தன்மையான ஓர் பொதுவெளியில் ஒரு பொறுப்பு வாய்ந்த நீண்ட வரலாறும் பெருமையும் கொண்ட கொழும்பு தழிழ்ச்சங்கத்தின் “செவ்வியல் ஆடல் விழா” ஒன்றை ஒதுக்கி இன்னொன்றை கொண்டாடும் அடிப்படையென்பது புரிதலுக்குரியது.
இலங்கையின் தமிழர் பண்பாட்டு ஆற்றுகை மரபு பன்மைத் தன்மையானதாக காணப்படும் சூழலில் மேலாதிக்க நிலையில் நின்று சிந்தித்தல் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பிற்கு பொருத்தமுடையதா? எனும் வினா எழுகின்றது.
செவ்வியல் மொழி, இழிசன மொழி எனும் பாகுபடுத்தல்களை இவ்வமைப்பு கொண்டாட விளைகின்றதா? “எந்த சித்தாந்தமும் நிறுவன மயப்படுத்தும் போது அது தூந்து போகும்” எனும் இந்திரா பார்த்தசாரதியின் கூற்று இவ்விடத்தில் எடுத்துக்காட்டுக்குரியது.
அண்ணாவி செல்லையா அவர்களின் பெயரை சுட்டி அரங்க நிகழ்வை கட்டமைத்திருக்கின்ற போதும் அந் நிகழ்வில் கூத்துக் கலைக்கும் அது சார்ந்த கலைஞர்களுக்கும் எவ்வாறான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உள்;ர் கலைகளின் வகிபங்கு என்ன என்பதும் கேள்விக்குரியது. வெறுமனே அரங்கின் பெயரை மட்டும் கட்டமைத்து உள்ளார்ந்து உயர்வு, தாழ்வு கொண்டாடுதல்; ஆரோக்கியமான விடயமன்று.
எனவே தமிழையும், தமிழ் மரபுகளையும் கொண்டு அடையாளப் படுத்தி நீண்ட வரலாறுகளுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்னொன்றிற்கு எதிராக ஒன்றை தாழ்த்தியும் மற்றொன்றை முதன்மைப் படுத்தியும் குறித்த விழாவை திட்டமிடுதல் ஓர் பண்பாட்டு சிதைத்தலே.
இ.குகநாதன்