மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு !

by smngrx01

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு ! on Tuesday, December 10, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு நிலவி வருகின்றமையினால் அப் பகுதி வாழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மட்டு. மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து சில நாட்களாக சீரான காலநிலை நிலவிவந்த போதிலும் நேற்று(09) முதல் மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவி வருகின்றது.

வங்கக்கடலில் தாழமுக்கம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் கடல் கொந்தளிப்பும் நிலவி வருகின்றது.

அத்துடன், கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை அவதான நிலையத்தின் அறிவிப்பையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கரையோரத்தில் அமைந்துள்ள மீன்பிடி வாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்