மட்டக்களப்பில் அரிசி ஆலைகளில் சோதனை ! on Tuesday, December 10, 2024
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி ஆலைகள் சோதனைகள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொருப்பதிகாரி என்.எம். சப்ராஸ் திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய தடையின்றி கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அரிசி கிடைக்கும் வகையில், அரிசி ஆலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அரிசி ஆலையில் இருப்பில் உள்ள நெல் மற்றும் அரிசி தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையில் 1800 மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 961 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வாகரை மற்றும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பிரதேசங்களில் இச் சுற்று வலைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், இலத்திரனயியல் பொருட்களுக்கு கட்டுருத்து காலம் வழங்காமை, காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை , தரச்சான்றுதலுக்கு உற்படாத பொருட்களை விற்பனை செய்தமை, நிறைகுறைவானபாண் விற்பனை செய்தமை, விலையை மாற்றி அமைத்தல் மற்றும் விலையை அழித்தல் இவ்வாறான குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 9,989,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது மாவட்டம் முழுவதும் பண்டிகை கால பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கூடிய அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தது.