6
காத்தான்குடியில் பாரிய சத்தத்துடன் வெடித்த வீட்டு மின்மானி ! on Tuesday, December 10, 2024
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி, ஸாவியா வீதி, ஜீ.எஸ்.லேனிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு(9) திடீரென பாரிய சத்தத்துடன் மின்மானி வெடித்து தீப்பிடித்து எரிந்தமையால் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக இலங்கை மின்சார சபை காத்தான்குடி மின் அத்தியட்சகருடன் தொடர்புகொண்டு விடயத்தை தெரியப்படுத்தியதை தொடர்ந்து ஸ்தலத்தலத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் தீ ஏனைய இடங்களிலும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
அவசரமாக மின்சார சபை ஊழியர்களை ஸ்தலத்தலத்திற்கு அனுப்பி தீ பரவாமல் தடுத்தமைக்காக குறித்த மின்சார சபை அதிகாரிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.