10
யாழில். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
ஆதீரா Tuesday, December 10, 2024 யாழ்ப்பாணம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் குறித்த போராட்டமானது இடம்பெற்றது.
இதன் போது வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.