9
மகாவலி ஆற்றில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு ! on Tuesday, December 10, 2024
மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று இன்று (10.12.2024) மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
40-45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தன.