தலைநகர் டமாஸ்கஸ் உட்பட சிரியா முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சிரியாவின் சிரியாவின் படைத்தளங்கள், வான்காப்பு இடங்கள், ஆயுதகிடங்குகள், இரசாயண ஆயுதங்கள், வெடிமருந்துக் கிடங்குகள், விமான நிலையங்கள், கடைற்படைத் தளங்கள், மற்றும் இராணுவ வசதிகள் என 310 இடங்களில் தாக்குதலகள் நடத்தப்பட்டன.
இத்தாக்குதல்கள் குறித்து கிளர்ச்சியாளர்கள் எதுவித கருத்துக்களையும் கூறவில்லை.
கிளர்ச்சியாளர்களின் கைகளுக்கு இந்த ஆயுதங்கள் சென்றுவிடக்கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
நேற்றிரவு மட்டும் 60 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதேநேரம் சிரிய எல்லைகளுக் இஸ்ரேலியப் படைகள் நுழைந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சிப் படைகள் பஷார் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த ஒரு நாளுக்குப் பிறகு, சிரியாவிற்குள் சுமார் 155 சதுர மைல் அளவுள்ள ஒரு இடையக மண்டலத்தை இஸ்ரேல் கைப்பற்றியது.