இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவே மதுபானச்சாலைகளை திறந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது மட்டும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. நாடு பொருளாதார சிக்கலில் இருந்த நேரத்தில் வரி வருமானத்திற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வரும் புதிய உத்தியாக உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக நீண்ட கால நோக்குடன் செயற்படுத்தப்பட்ட கலால் உரிமம் வழங்கும் நடைமுறை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.
தற்போதைய செயல்பாடு வெளிப்படையானது மற்றும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வருமான வழியை இரத்து செய்வதா, இல்லையா என்பது தொடர்பில், அவ்வாறு இல்லையேல் புதிய கலால் வரி சட்டத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் நாடாளுமன்ற அனுமதியுடன் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, அதனை முன்னெடுத்து செல்வதற்கோ அல்லது இரத்து செய்வதற்கான அதிகாரம், அமைச்சரவைக்கு உரித்துடையது என்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்களை விநியோகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.