இந்தியாவின் தலைநகரிலுள்ள 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by wamdiness

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள 40 பள்ளிகளுக்கு அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் சோதனையிட்டனர்.

மின்னஞ்சல் மூலம் நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். முப்பது ஆயிரம் டொலர் அனுப்பாவிட்டால் குண்டுகள் வெடிக்க வைக்கப்படும் என எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

சோதனையில் இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அந்த மிரட்டல்கள் போலியானவை என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவில் வெடிகுண்டுப் புரளி மற்றும் மிரட்டல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும்  பள்ளிகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு பல வெடிகுண்டு மிரட்டல்கள் பல குழப்பத்திற்கு வழிவகுத்தன.

இந்தியாவின் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் இந்த ஆண்டு நவம்பர் 14 வரை கிட்டத்தட்ட 1,000 வெடிகுண்டு புரளி மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால் நீண்ட தாமதங்கள் மற்றும் விமானம் திசைதிருப்பப்பட்டது. 

கடந்த மே மாதத்தில், போலி வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதையடுத்து, டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிட்டத்தட்ட 100 பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூர் ஊடகங்களுக்கு மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறிந்து அனுப்பியவரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தில்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்