8
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மறுநாள் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் மன்று வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் மன்றில் அவரை முற்படுத்திய வேளை அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது