கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ! on Monday, December 09, 2024
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டு மகசீன்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மீதொட்டமுல்ல சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த கொள்கலனொன்றின் அடியில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றச் சம்பவமொன்றை மேற்கொள்ளும் நோக்கில் கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கண்டுபிடிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மகசீன்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.