கடனாவில் எப்பிடிக் கைது செய்யப்பட்டார் ஆவா குழுவின் தலைவர்!

by guasw2

ஆவா குழுவின் தலைவர் 32 வயதுடைய அஜந்தன் சுப்பிரமணியம் என அழைக்கப்படும் பிரசன்னா நல்லலிங்கம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு பிரான்சில் அபிராமன் பாலகிருஷ்ணனை என்பரைக் கொன்றது மற்றும் மற்றொருவரைக் கொலை செய்ய முயன்றது தொடர்ப்பில் பிரான் நாட்டினால் இவருக்கு சர்வேதேச காவல்துறையினால் கைதுசெய்வதற்கான பிடியாணை வழங்கப்பட்டது.

பிரான்சில் ஆவா குழுவுக்கும் எல்.சி போயிஸ் குழுவுக்கும் இடையிலான நடத்த மோதலிலேயே இக்கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் இரு குழுக்களும் பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னேவ் என்ற பிரதேசத்தைக் கட்டுப்படுத்துவதில் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டுள்ளன என பிரெஞ்சு ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

பிரசன்னா மற்றும் அவரது ஐந்து நண்பர்கள் முகங்களை மறைத்தவாறு 2022 ஆண்டு செப்டெம்பர் 21ஆம் நாள் அன்று லா கோர்னியூவில் வாகனத்தில் இருந்த இருவரை கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் திட்டமிட்டு தாக்கியுள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் பிரசன்னா கனடா ரொறொன்டோவில் இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இவர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காகப் பிரான்சுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளார். இதனை கனடாவின் நீதித்துறை கடந்த புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்னா நல்லலிங்கம் இலங்கையின் வடமாகாணத்தில் இயங்கும் சட்டவிரோத ஆவா குழுவின் தலைவர் என நம்பப்படுகிறது.

மார்ச் 2021 இல் சிவகுமாரன் ஜீவரத்னா கொல்லப்பட்டதற்காக பிரசன்னா நல்லலிங்கம் இலங்கையில் தேடப்பட்டு வந்தார். நீதிமன்றில் பிடியாணை வழங்கிய நிலையில் இவர் நாட்டை விட்டு பிரான்சுக்கு தப்பியோடியுள்ளார். இந்நிலையில் இவருக்கு எதிராக சர்வதேச காவல்துறை பிடியாணை வழங்கப்பட்டது.

இதேநேரம் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைச் செயற்பாடுகளுக்காக இவருக்கு ஆறுமாத இடை நிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதை நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன அத்துடன் 2021 ஆம் ஆண்டு இவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் பெற்றார் என பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் ஆவா குழு உறுப்பினர் மீதான முந்தைய தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரசன்னா நல்லலிங்கம் டிசம்பர் 2022 இல் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள் நுழைந்தார். பதிவுகளின்படி, கியூபெக்கில் உள்ள ரோக்ஸ்ஹாம் சாலையில் உள்ள அங்கீகரிக்கப்படாத சோதனைச் சாவடியில் ஒரு போலிப் பெயரைக் கொடுத்து உள்நுழைய முடிந்தது. அவர் எப்படி அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்பது தெரியவில்லை. இவர் 2023 இல் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரத் திட்டமிட்டிருந்தார். 

அப்போது பிரெஞ்சு அதிகாரிகள் சர்வதேசக் காவல்துறையுடன் இணைந்து இவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிரசன்னா இந்த ஆண்டு மே மாதம் வரை அகதிகள் அனுமதி விசாரணைக்கு முன்னிலையாகமல் இருந்த நிலையில் டொராண்டோ காவல்துறைச் சேவையின் உதவியுடன், கனடா எல்லைச் சேவை முகவரால் பிரசன்னாநல்லலிங்கம் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் எடுத்ததும், அதிகாரிகள் இன்டர்போலிடம் கோப்பில் உள்ள அவரது கூற்றில் வழங்கப்பட்ட கைரேகையுடன் பொருத்தியபோது இவரின் கைரேகையும்  பொருத்தமாக இருந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரச்ன்னா ​​நல்லலிங்கத்தின் சட்ட ஆலோசகர் ஆலன் லோபலிடம் கனேடிய ஊடகம் கருத்து கேட்கப்பட்டபோது அவர் எதுவித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரச்சன்னா நல்லலிங்கம் தற்போது காவலில் வைக்கப்பட்டு, நாடு கடத்துவது தொடர்பான முடிவுக்காக காத்திருக்கிறார். அவரது விசாரணை மே 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்