ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்: யார் இவர்கள்? பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்: யார் இவர்கள்? பின்னணி என்ன?

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்: யார் இவர்கள்? பின்னணி என்ன?

இந்த இஸ்லாமிய ஆயுதக்குழு சிரியாவில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2012iல் ஜபத் அல் -நுஸ்ரா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த குழு,

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பொறுப்பான அல்கொய்தாவின் நேரடி துணை அமைப்பாகும்.

இஸ்லாமிக் ஸ்டேட் என்று அழைக்கப்படும் குழுவின் தலைவரும் இதன் உருவாக்கத்தில் பங்கு வகித்தார். எனினும், இரு குழுக்களும் பின்னர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டன.

பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிரான மிகவும் தீவிரமான கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. ஆனால், அவர்களின் ஜிஹாதி சித்தாந்தம் சிரியாவின் கிளர்ச்சிக் அமைப்புகளுடன் முரண்படுவதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2016இல் அதன் தலைவர் அல் கொய்தாவில் இருந்து பிரிந்து ஜபத் அல் நுஸ்ராவை கலைத்தார். ஓராண்டுக்கு பிறகு, பிற ஒத்த குழுக்களுடன் இணைந்த இந்த குழு, தற்போதைய பெயருக்கு மாறியது.

ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் தனது அதிகார தளத்தை இட்லிப்பில் உருவாக்கியது.

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு