வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு !

by wp_fhdn

வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு ! on Sunday, December 08, 2024

நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதியை இதுவரை அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், டிசம்பர் இறுதி அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பஸ் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை நிலவுவதாகவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் பிரசாத் மானகே குறிப்பிட்டார்.

தற்போதுள்ள வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன விலைகளை விளம்பரப்படுத்துவதையும், முன்கூட்டிய கொள்வனவு கட்டளைகளை செய்யுமாறு நுகர்வோரை வற்புறுத்துவதையும் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகவே தாம் பார்க்கின்றோம்.

இதுபோன்ற விடயங்கள், தற்போது வானங்களை வைத்திருப்போர், தேவையற்ற அச்சத்தில் குறைந்த விலையில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் என்றும், அவசர முடிவுகளை எடுக்க உந்துதலை அளிக்கும்.

தம்மை பொறுத்தவரையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகவே தளர்த்தப்படும், இதன்படி முதலில் பஸ்கள் மற்றும் லொறிகளும் அதைத் தொடர்ந்து வேன்கள் மற்றும் ஏனைய வணிக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

எனினும் இந்த நடைமுறைகளுக்கான உரிய திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வாகன இறக்குமதி சந்தை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், வாடிக்கையாளர் விரும்பிய வாகனத்தை போட்டி விலையில் கொள்வனவு செய்வதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்