வலி.வடக்கு மீள்குடியேற்றம் பூரணமாக இன்னமும் 2500 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்க வேண்டும் என ஆமி மாமா நல்ல மாமா புகழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளரும் தமிழரசு முக்கிய புள்ளியுமான சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்னும் 16 கிராமசேவையாளர் பிரிவு பகுதியளவிலும் மூன்று கிராமசேவையாளர் பிரிவு முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
அதாவது ஜே/226 நகுலேஸ்வரம்,ஜே/233 காங்கேசன்துறை மேற்கு, ஜே/234 காங்கேசன்துறை மத்தி,ஜே/238 கட்டுவன்,ஜே/240 தென்மயிலை,ஜே/242 குரம்பசிட்டி,ஜே/243 குரும்பசிட்டி கிழக்கு,ஜே/244 வசாவிளான் கிழக்கு,ஜே/245 வசாவிளான் மேற்கு,ஜே/246 மயிலீட்டி வடக்கு,ஜெ/249 தையிட்டி வடக்கு,ஜே/250 தையீட்டி தெற்கு, ஜே/251 மயிலீட்டிதுறை வடக்கு,ஜே/252 பலாலி தெற்கு,ஜே/253 பலாலி கிழக்கு,ஜே/254 பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவு பகுதியளவிலும் ஜே/248 மயிலிட்டி தெற்கு, ஜே /255, பலாலி வடமேற்கு, ஜே/256 பலாலி மேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவு முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
இதன் பிரகாரம் கிட்டத்தட்ட 2500 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
அத்துடன் வலி.வடக்கையும் வலி.கிழக்கையும் இணைக்கின்றதும்,
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையான வல்லை – அராலி வீதியில் வசாவிளான் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான 2-1/2 கிலேமீற்றர் பிரதான பாதை விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
மேலும் பலாலி மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமான பலாலி வீதியானது வயாவிளான் சந்தியிலிருந்து பலாலி சந்தி வரையான 3-1/2 கிலோமீற்றர் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதோடு மக்களின் யாழ்ப்பாணத்தின் பிரதான மார்க்கமாக இருக்கின்ற பருத்திதுறை – பென்னாலை வீதியின் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கீரிமலை கிருஷ்ணன் கோவில் வரையான ஒரு கிலோமீற்றர் தூரம் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட பலாலி வீதியின் கிழக்கு பகுதியான ஒரு பகுதி 235 ஏக்கர் விடுவிக்கப்பட்ட போதும் கடந்த மே முதல் அப்பகுதிக்கு மக்கள் சென்று வரக் கூடிய நிலைமை ஏற்பட்டது.
எனினும் இன்று வரை குறிப்பாக புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் கூட இராணுவ உயர் பாதுகாப்பு வேலி அகற்றப்படாதுள்ளது. இதற்கு காரணம் இராணும் அவ்வேலியை அகற்றுவதற்கு அரச நிர்வாகத்திடம் 18 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதியினை கோரி நிற்கின்றது. இதனால் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு இருந்த போதிலும் மக்கள் அக்காணிகளில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது இருக்கின்றனர்.
அதாவது அக்காணிகளில் அபிவிருத்தி மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட முடியாது பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாத நிலைமையே காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க 2013 அம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி 6371 ஏக்கர் இராணுவ தேவைக்கு சுவிகரிப்பதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்ட போதும் அவற்றுக்கு எதிராக வலி.வடக்கு மக்கள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2176 காணி உரிமையாளர்களின் பேரில் வழக்கு தாக்கல் மேற்கொண்டிருந்தார். அவ்வழக்கு தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் 3000 ஏக்கருக்கு மேல் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2023 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் நடத்திய கூட்டத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு காணி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அறிவித்தல் வழங்கியும் அது ரத்துச் செய்யப்படாமலுள்ளது. எனவே, புதிய அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென வலி.வடக்கு மக்கள் சார்பில் கோருகின்றேன்.
அத்துடன், மீள்குடியேற்றத்துக்கு தேவையான நிதிகள் போதுமானதாக விடுவிக்கப்படாத நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தேக்க நிலையை அடைந்துள்ளது.
குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட பலாலி வடக்கு மக்கள் (கிறிஸ்தவ நகர்) தங்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கடற் இறங்குதுறை இல்லாமல் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.அது போன்று மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பு கூடிய துறைகளுக்கு கூடிய நிதி ஒதுக்கீடுகளை புதிய அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
புதிய அரசாங்கம் மக்களுடைய காணிகளை கடந்த கால அரசாங்கம் போல் தேர்தல் வாக்குறுதியாக காணிவிக்கப்படுமென கூறிய போதும் அண்மையில், தேர்தல் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு செயலாளர் இக்காணிகள் தமது அரசாங்கத்தின் 5 வருட ஆட்சிக் காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுமென கூறி மக்களின் நம்பிக்கையை சிதைவடையச் செய்துள்ளார்.
இதனை நம்பி தாங்கள் மீள்குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தொடர்ந்து தமது அல்லல்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஏனவே அம்மக்களுடைய வாழ்வில் ஒளிக்கீற்று வீசுவதற்காக இராணு முகாம்கள் அல்லாத பல ஏக்கர் காணிகளில் இராணுவத்தால் விவசாயம்,வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நிலங்களை உடனடியாக விடுவித்து மக்களின்மீள்குடியேற்றத்தை துரிப்படுத்து வேண்டும்.
குறிப்பாக தையிட்டி வடக்கில் மக்கள் தொடர்ச்சியாக 35 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெயந்து வாழும் நிலையில் உள்ளனர்.அங்கிருந்த பெண்கள் இராணுவ முகாம் அகற்றப்பட்ட போதும் இராணுவம் வர்த்தக கடைகளை நடத்தி வருகின்றது.
இக்காணிகள் முன்னர் விடுவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இப்போதும் இராணுவம் வர்த்தக நடவக்கையில் ஈடுபடுவதால் தையீட்டி மக்கள் விரக்தியுற்று காணப்படுகின்றனர்.