மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு !

by wp_fhdn

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ! on Sunday, December 08, 2024

ஹதரலியத்த பொலிஸ் பிரிவில் தேதுனுபிட்டிய பிரதேசத்தில் நேற்று (07) மின்சாரம் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த நபர் கால்நடை வளர்ப்பு மேற்கொண்டு வந்தவர் எனவும், பண்ணையை சுத்தம் செய்யும் நடவடிகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணத்தில் மின்சாரம் தாக்கி உயிிழந்ததாக கூறப்படுகிறது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக ரம்புக்கனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹதரலியத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்