13
பிரான்சில் நேற்று சனிக்கிழமை நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடன் மற்றும் பிரிட்டனின் இளவரசர் வில்லியம் உள்ளிட்ட 1,500 விருந்தினர்கள் மீண்டும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
2019 இல் ஏற்பட்ட தீ விபத்தில் பாரிஸின் 12 ஆம் நூற்றாண்டின் நோட்ரே டேம் தேவாலயத்தின் கூரைகள் உட்பட கட்டடித் தொகுதிகள் எரிந்தமை நினைவூட்டத்தக்கது.
இத்தேவாலயத்தை புனரமைக்க 2019 தீ விபத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட $1 பில்லியன் நன்கொடைகள் குவிந்தன.