பதவிய துப்பாக்கிச் சூடு – மூவர் கைது !

by sakana1

பதவிய துப்பாக்கிச் சூடு – மூவர் கைது ! on Sunday, December 08, 2024

பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 5ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பதவிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் கிரியிப்பன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினரால் வெலிஓய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவைப் பெற்று பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக வெலிஓயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் மஹியங்கனை மற்றும் எஹெட்டுகஸ்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த 26, 30 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

இந்நிலையில், பிரதான சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட T56 ரக துப்பாக்கியே சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்