வாடகை வாகன சாரதிகளுக்கு போதையேற்றி அவர்களின் நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து வந்த 04 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் முச்சக்கர வண்டி , கார் போன்ற வாடகை வாகனங்களை வாடகைக்கு , அமர்த்தி அதில் பயன் செய்யும் போது , சாரதிகளுக்கு போதைப்பொருளை வழங்கி , போதையில் சாரதிகள் மயங்கிய பின்னர் அவர்களின் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள சுமார் 15 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் தமது கைவரிசையை காட்டி வந்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 55 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை நால்வரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 41 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடைகளில் இருந்து மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.