மாவீரர் தினம்:தொடரும் விசாரணைகள்!

by 9vbzz1

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பில் இரு இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

மாவீரர் நாள் குறித்து முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

இதேவேளை, வல்வெட்டித்துறை பகுதியில் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடியமை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 06 பேரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் மாவீரர் நாள் மற்றும் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, முகநூலில் பதிவிட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 06இற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்