வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது ! on Saturday, December 07, 2024
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 100 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.