மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி !

by 9vbzz1

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி ! on Saturday, December 07, 2024

தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியின் நேஹின்ன பிரதேசத்தில் நேற்று (6) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற இருவரும் நாகொட மற்றும் வில்பாத வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 37 மற்றும் 42 வயதுடைய நேஹின்ன மற்றும் நேபட பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களின் சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்