16
தேங்காய் விலை உயர்வு : கதிர்காமத்தில் சிதறு தேங்காய் உடைப்பு சடுதியாக குறைவு
நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
தேங்காய் தட்டுப்பாடு மற்றும் தேங்காயின் விலை உயர்வால் கதிர்காமம், செல்ல கதிர்காமம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இனிப்பு வகைகளை உற்பத்தி செய்யும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கதிர்காம யாத்திரிகர்கள் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, வழக்கமாக உள்ள நிலையில் தேங்காய்களின் அதிக விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் உடைத்து வழிபடுவது, 80 சதவீதம் குறைந்துள்ளது.