சிரியா: போரால் சிதைந்த அலெப்போ நகரில், மீண்டும் ஒன்றுகூடும் குடும்பங்கள்

காணொளிக் குறிப்பு, சிரியா நாட்டைச் சேர்ந்த அப்தெல்காஃபி, 8 ஆண்டுகளுக்கு பிறகு அலெப்போவிற்கு திரும்பியுள்ளார்

சிரியா: போரால் சிதைந்த அலெப்போ நகரில், மீண்டும் ஒன்றுகூடும் குடும்பங்கள்

சிரியா நாட்டைச் சேர்ந்த அப்தெல்காஃபி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலெப்போவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றுள்ளார். கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்த இந்த சிரிய நகரத்தில் தனது தந்தையை அவர் சந்தித்துள்ளார்.

“அலெப்போ நகரில் வசிப்பது என்பது என் வாழ்நாள் கனவு. என்னால் காத்திருக்க முடியவில்லை. கிளர்ச்சிப் படைகள் நகருக்குள் நுழைந்து, 3 மணி நேரம் கழித்து, நான் இங்கு வந்தேன்.” என்று கூறுகிறார் அப்தெல்காஃபி.

தனது குழந்தைகளையும் அழைத்து வந்துள்ள அவர், “என்னுடைய பிள்ளைகள் போரின் போது தான் பிறந்தனர். குடும்பத்தைப் பிரிந்து, அவர்கள் வளர்வது வருத்தம் அளித்தது. இப்போது அவர்களுக்கு அன்பு காட்ட உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது அடிக்கடி, தாத்தா, மாமாவின் வீடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள்.” என்றும் கூறுகிறார்.

சிரிய கிளிர்ச்சிப் படைகள் அலெப்போவை மீண்டும் கைப்பற்றியுள்ளன. சண்டை தொடர்வதால், சிரியாவின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.