பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில் : புதிய ஜனநாயக முன்னணி ! on Friday, December 06, 2024
கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இது இடம்பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.