வீதியில் செல்வோரை அச்சறுத்தும் வகையில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நடமாடிய இருவரை பருத்தித்துறை நீதிமன்று எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது
பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வேளை வீதியில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் சில இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் நடமாடியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சிலர் தப்பியோடிய நிலையில் இருவரை மடக்கி பிடித்திருந்தனர்.
மடக்கி பிடித்தவர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை தப்பி சென்ற நபர்களை கைது செய்ய தாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.