மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு – மூதாட்டி உயிரிழப்பு

by wp_shnn

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு – மூதாட்டி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், 73 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில்  நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மூதாட்டியை பதவியா வைத்தியசாலை அனுமதித்த நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

T56 ரக துப்பாக்கியாலையே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , துப்பாக்கி சூட்டுக்கு காரணம் தெரியவில்லை எனவும் , மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பதவியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்